கிரிக்கெட்

INDvAUS- முதல் நாளே 2 விக்கெட்டுகள்… தெறிக்கவிட்ட நம்ப நடராஜன்!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன்.

 

Trending

Exit mobile version