கிரிக்கெட்

INDvAUS – 5 விக்கெட்டுகள் எடுத்து ஆஸி.,யை அலறவிட்ட சிராஜுக்கு பும்ராவின் ‘நெகிழ்ச்சி ஹக்’

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தியா கடைசி நாளான நாளை வெற்றி பெற 324 ரன்கள் தேவை.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, காபாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி 336 ரன்கள் குவித்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவின் பவுலிங்கை பொறுத்தளவில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டினார்.

இதன் மூலம், இந்தியா வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா ஆட ஆரம்பித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். இன்று மொத்தமாக இந்தியாவுக்கு, 1.5 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.

நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாள் ஆட்டம் எப்போதும் கடினமானதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, தற்போது டெஸ்ட் போட்டியை வெல்லும் கட்டத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிராஜ். தனது அசாத்தியப் பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார் சிராஜ். தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பெருமையையும் பெற்றுள்ளார் சிராஜ். அவர் ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு பெவிலியன் திரும்பிய போது, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, சிராஜை ஆரத்தழுவி பாராட்டுகிறார். இது குறித்தான வீடியோ தற்போது படு வைரலாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version