கிரிக்கெட்

#INDvAUS- “இந்தியாவுக்கு எதிராக எங்கள் ஒரே திட்டம் இதுதான்!”- ஸ்டார்க் ஓப்பன் டாக்

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றம் கொடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி, அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.

கோலியைத் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேன்களும் அரைசதம் கூட எடுக்கவில்லை. துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் செத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் மட்டும்தான் ஓரளவுக்காவது நிதானமாக விளையாடி, நாற்பது ரன்களையாவது தாண்டினார்கள். மற்றப்படி வேறு எந்த பேட்மேனும் சொல்லிக் கொள்ளும்படி நிலைத்து ஆடவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாமல் ஆல்-அவுட்டாகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், ஆக்ரோஷமகா பந்துவீசினார். அவர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தூள் கிளப்பினார். குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே இந்திய தொடக்க வீரர்களில் ஒருரான பிரித்வி ஷாவை டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார் ஸ்டார்க்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியா வைத்துள்ள திட்டம் குறித்து கேட்டபோது, ‘எங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே இலக்கு. விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்புவது மட்டும்தான். எனவே இரண்டாவது நாள் ஆட்டத்தில் மீதம் இருக்கும் 4 விக்கெட்டுகளையும் உடனடியாக கைப்பற்றுவோம்’ என்று சவாலாக தெரிவித்தார். சொன்னது போலவே இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்தியாவை ஆல் அவுட் ஆக்கியது ஆஸ்திரேலியா.

seithichurul

Trending

Exit mobile version