கிரிக்கெட்

INDvAUS- ‘இந்தியா கிட்ட எதிர்பாக்குறது என்னன்னா…’- நாதன் லயன் சவால்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்தப் போட்டி மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியாவிடமிருந்து தான் எதிர்பார்ப்பது பற்றி ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ‘இந்தியா, முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தாலும், அவர்கள் கம்-பேக் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். காரணம் அவர்கள் அணியில் பல உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

அவர்கள் மிக மூர்க்கமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. எப்படியும் அவர்கள் எங்களுக்கு எதிராக மீண்டும் விளையாடும் போது முழு முயற்சி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். விராட் கோலியின் இடத்தையும் இந்திய அணியின் பலரால் நிரப்ப முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version