கிரிக்கெட்

INDvAUS- இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்ததா? – 91 ரன்னில் இப்படி அவுட் ஆகிட்டாரே கில்

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தியாவுக்கு, இலக்கு வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் வெற்றி பெறும் கனவோடு தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா.

ஆனால், தொடகத்திலேயே ரோகித் சர்மா, 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய புஜாரா, சுப்மன் கில்லோடு ஜோடி போட்டு நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தனர். ஒரு பக்கம் புஜாரா, தடுப்பாட்டம் ஆட, இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்துக் கொண்டிருந்தார் கில்.

அவர் 146 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்திருந்த போது, நாதன் லயன் வீசிய பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அதை ஸ்டீவ் ஸ்மித் சரியாக பிடித்து, கில்லை பெவிலியன் அனுப்பினார்.

எப்படியும் கில் சதமடித்து, இன்று இந்தியாவை வெற்றிக்குப் பக்கத்தில் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களின் மனம் நொறுங்கியது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த் கேபட்ன அஜிங்கியே ரஹானேவும், செத்தேஷ்வர் புஜாராவும் தற்போது நிதான ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள். இந்திய அணியின் இரு பெறும் தூண்கள் என்று போற்றப்படும் இந்த இருவர் பார்ட்னர்ஷிப் போட்டால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 47 ஓவர்களில்180 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றும்.

இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, பார்டர் – கவாஸ்கர் டிராஃபியையும் வெல்லும். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி, மிக நீண்ட தொடரை விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்று கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை இந்தியா, 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அதேபோல முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவைத் தகர்த்தது இந்திய அணியின் பேட்டிங். தற்போது மிகவும் விறுவிறுப்பான 4வது டெஸ்டின் 5வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version