கிரிக்கெட்

INDvAUS – கைக்கு வந்த லட்டுகளை லபக்கென்று பிடிக்கத் தவறிய ஆஸி., – 3வது டெஸ்ட் சொதப்பல்கள்!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாளான இன்று இந்தியா, 5 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத காரணத்தால், ஆட்டம் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தவறவிட்ட கேட்ச் வாய்ப்புகள் மிக அதிகம். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி, கைக்கு வந்த அனைத்து லட்டு கேட்சுகளையும் தவறவிட்டு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்துவிட்டது. ஒரு வேளை ஆஸ்திரேலிய அணி வந்த அனைத்து கேட்சுகளையும் பிடித்திருந்தால், ஆட்டத்தின் முடிவு வேறாக கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ, தொடரில் இன்னும் ஒரேயொரு போட்டி பாக்கியிருக்கும் நிலையில், அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே கோப்பையையும் கைப்பற்றுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.

3வது போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, 338 ரன்கள் எடுக்க, அடுத்த ஆடிய இந்திய அணி, 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரலேயா 334 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 5வது நாளான இன்று தனது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்தியா. ஒரு பக்கம் செத்தேஷ்வர் புஜாரா, நிலைத்து ஆட, ரிஷப் பன்ட் அதிரடி காட்டினார். 97 ரன்களுக்கு 118 ரன்கள் எடுத்து அசத்தினார் பன்ட். எப்படியும் அவர் சதம் விளாசி, அணியையும் வெற்றியடையச் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். புஜாராவும் 205 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதற்கடுத்து வந்த அனுமா விகாரி மற்றும் அஷ்வின் ஆகியோர் தடுப்பாட்டம் விளையாடி, விக்கெட் விழா வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசியாக விகாரி 23 ரன்களுடனும், அஷ்வின் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆட்ட டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

3வது போட்டியில் துரதிர்ஷ்டவசமாக, ஆஸ்திரேலிய ரசிகர்கள், இந்திய வீரர்கள் மீது நிறவெறி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த காரணத்தினாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கு அதிக கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருவதாலும், 4வது போட்டி நடப்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸிங் தவறவிட்ட கேட்சுகளின் தொகுப்பு இதோ:

Trending

Exit mobile version