கிரிக்கெட்

INDvAUS – கடைசி வரை போராடிய இந்தியா; டிராவில் முடிந்த 3வது டெஸ்ட்!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது.

இந்தப் போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, 338 ரன்கள் எடுக்க, அடுத்த ஆடிய இந்திய அணி, 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரலேயா 334 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 5வது நாளான இன்று தனது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்தியா. ஒரு பக்கம் செத்தேஷ்வர் புஜாரா, நிலைத்து ஆட, ரிஷப் பன்ட் அதிரடி காட்டினார். 97 ரன்களுக்கு 118 ரன்கள் எடுத்து அசத்தினார் பன்ட். எப்படியும் அவர் சதம் விளாசி, அணியையும் வெற்றியடையச் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். புஜாராவும் 205 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதற்கடுத்து வந்த அனுமா விகாரி மற்றும் அஷ்வின் ஆகியோர் தடுப்பாட்டம் விளையாடி, விக்கெட் விழா வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசியாக விகாரி 23 ரன்களுடனும், அஷ்வின் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆட்ட டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

Trending

Exit mobile version