கிரிக்கெட்

INDvAUS – வரலாற்றுத் தோல்வியடைந்த இந்தியா… மனமுடைந்து குமுறிய கோலி… ஓப்பன் டாக்!

Published

on

இந்தியாஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 36 ரன்கள் எடுத்து சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். போட்டியையும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீதும், கேப்டன் விராட் கோலி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இவை குறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி, ‘எங்களின் மிக மோசமான பேட்டிங் இதுவாகத்தான் இருக்க முடியும். செய்த தவறுகளை கண்டறிந்து அதைத் திருத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும். எனவே இது குறித்து ஆராய்ந்து ஆராய்ந்து பெரிதுப்படுத்தத் தேவையில்லை. மிக மோசமான பேட்டிங்கை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளதால், இதற்குக் கீழே போக வாய்ப்பில்லை. எனவே வரும் போட்டிகளில் அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறதுஎன்றார். 

கோலி மேலும் பேசுகையில், ‘இந்த டெஸ்டைப் பொறுத்தவரை எல்லாம் சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. எது குறித்தும் எங்களால் நிதானமாக யோசித்து செயல்பட முடியவில்லை. இனி கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் போட்டு குடைந்து கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று யோசிப்பதே ஆக்கப்பூர்வமாக இருக்கும். ஆஸ்திரேலிய பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் பந்துவீசியது போலத்தான் இரண்டாவது இன்னிங்ஸிலும் செயல்பட்டனர். ஆனால் அதை நாங்கள் இரண்டாவது முறை சரியாக எதிர்கொள்ளவில்லைஎன்று முடித்துக் கொண்டார். கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது. அதற்காக அவர் மனைவியுடன் இருக்க தாயகம் திரும்புகிறார். இதனால் வரும் போட்டிகளில் கோலி பங்கேற்கப் போவதில்லை. 

Trending

Exit mobile version