உலகம்

இந்தோனேசிய விமான விபத்து.. 13.25 நிமிடத்தில் மாயமான லயன் விமானம்!

Published

on

ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.

இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை என்னவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் சொந்தமான ஜேடி610 விமானம்தான் கடலில் விழுந்தது. இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது.

இந்த விமானம் சரியாக இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி புறப்பட்டு இருக்கிறது. ஆனால் விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் காணாமல் போய் இருக்கிறது. அதன்பின் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version