தமிழ்நாடு

மார்ச் மாதம் வரை விமான சேவை ரத்து: அதிரடி அறிவிப்பு!

Published

on

வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை முழுமையாக ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பயணங்கள் வெகுவாக குறைந்து உள்ளது என்பதும் பேருந்துகள் ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக விமான பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அடுத்து விமானத்தில் செல்வதை பயணிகள் தவிர்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் ஒரு சில விமான சேவைகளை வரும் மார்ச் மாதம் வரை முழுமையாக ரத்து செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளது.

குறிப்பாக திருச்சியில் இருந்து டெல்லி செல்லும் விமானங்கள், திருச்சியில் இருந்து கொழும்பு செல்லும் விமானங்கள் மார்ச் மாதம் வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் விமானம் காலையில் மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்த இண்டிகோ நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version