தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள சுத்தமான கடற்கரைகள் எவை? அசுத்தமான கடற்கரைகள் எவை?

Published

on

உலகின் மிகவும் நீளமான இரண்டாம் மிகப் பெரிய கடற்கரை தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மெரினா என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் தமிழ்நாட்டின் சுத்தமான கடற்கரைகள் எவை, அசுத்தமான கடற்கரை எவை என்பது பலருக்கும் தெரியாது.

தேசிய கடலோர ஆராய்ச்சிகள் மையம் அண்மையில் இந்தியாவில் உள்ள சுத்தமான கடற்கரைகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டிலிருந்து சில சுத்தமான கடற்கரைகளும், மிகவும் அசுத்தமான கடற்கரைகளும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பட்டியலில் சென்னையில் உள்ள எலைட்ஸ், திருவான்மியூர் மற்றும் கோவளம் உள்ளிட்டவை சுத்தமான கடற்கரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கோடியக்கரை மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை மிகவும் சுத்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் கடலூரில் உள்ள சில்வர் பீச் அசுத்தமான கடற்கரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடி முத்துநகர் பீச் மிகவும் அசுத்தமான கடற்கரை என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version