வேலைவாய்ப்பு

இந்தியாவில் இதை படித்தவர்களுக்குத் தான் அதிக டிமாண்ட்? என்ன வேலை தெரியுமா?

Published

on

இந்தியாவில் ஐடி வேலைகளுக்குப் படித்தவர்களை விட மார்க்கெட்டிங் படித்தவர்களுக்குத் தான் அதிக டிமாண்ட் என்று மேன் பவர் இந்தியா குழுமம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐடி வேலைகளுக்கான டிமாண்ட் மார்கட்டிங், விற்பனைகள் மற்றும் நிர்வாகம் பணிகளுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது.

எனவே இந்தியாவில் அதிக டிமாண்ட் உள்ள வேலைவாய்ப்புகள் எவை என்ற பட்டியலை இங்கு வரிசையாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் டாப் 10 டிமாண்ட் உள்ள வாய்ப்புகள்

1) விற்பனை, மார்கட்டிங் மற்றும் மேலாளர்
2) ஐடி ஊழியர்கள் (சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள், நெட்வொர்க் நிர்வாகிகள், தொழில்நுட்ப உதவி)
3) இஞ்சினியர்கள் (கெமிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல்)
4) கணக்கு & நிதி (சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், நிதி ஆய்வாளர்கள்)
5) சுகாதாரத்துறை வல்லுநர்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ துறை வல்லுநர்கள்)
6) ஆசிரியர்கள்
7) திறமையான வர்த்தகங்கள் (எலக்ட்ரீசியன்ஸ், வெல்டர்கள், மெக்கானிக்ஸ்)
8) மேலாண்மை நிர்வாகிகள் (துறைத் தலைவர்கள், செயல்பாட்டுத் தலைவர்கள்)
9) ஐடி துறை இல்லாத மேலாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிறர்
10) ரெஸ்டாரண்ட் & உணவக ஊழியர்கள்

seithichurul

Trending

Exit mobile version