சினிமா செய்திகள்

மொத்தமே 7 படங்கள் தான், அதில் மூன்று ராஜமெளலி படங்கள்!

Published

on

இந்தியாவில் இதுவரை மொத்தமே 7 படங்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் அதில் மூன்று படங்கள் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய படங்கள் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது

இந்த நிலையில் இதுவரை இந்தியாவில் மொத்தம் 7 படங்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பதும் அதில் பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ என மூன்று படங்களுக்கு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் பின்வருமாறு:

ஆர்ஆர்ஆர் : 3 நாட்களில் 500 கோடி வசூல். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்

பாகுபலி 2 : 15 நாட்களில் 1,250 கோடி வசூல் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள்: பிரபாஸ், அனுஷ்கா

2.0 : 750 கோடி வசூல், இயக்குனர்: ஷங்கர் நடிகர்கள்; ரஜினிகாந்த், எமிஜாக்சன்

பாகுபலி : 586 கோடி வசூல் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள்: பிரபாஸ், அனுஷ்கா

தங்கல் : 741 கோடி வசூல் இயக்குனர்: நித்திஸ் திவாரி நடிகர்க: அமீர்கான், கிரண் ராவ், சாக்ஷி தன்வர்

தூம் 3 : ரூ. 557 கோடி வசூல் இயக்குனர்: ஜெய் கிருஷ்ணா ஆச்சார்யா நடிகர்கள்: அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், சித்தார்த்

சுல்தான் : ரூ. 623 கோடி இயக்குனர்: அப்பாஸ் ஜாஃபர் நடிகர்கள் சல்மான் கான், அனுஷ்கா சர்மா

 

seithichurul

Trending

Exit mobile version