உலகம்

எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்து: ரஷ்யா எச்சரிக்கை

Published

on

எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து என ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகர் உள்பட பல நகரங்களில் ரஷ்யாவின் படகள் முன்னேறி வருவதாகவும் தலைநகரை விரைவில் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் சர்வதேச எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பொருளாதார தடை மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் பராமரிப்பு உதவிகளை நிறுத்த போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் சர்வதேச விண்வெளி நிலையத்தை காப்பாற்ற முடியாமல் போகும் என்றும் அவ்வாறு நடந்தால் 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா சீனா அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளின்மீது விழ அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்யாவின் மேல் அமைக்கப்படாததால் எங்களுக்கு எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லை என்றும் இதற்கு மேல் விரும்பினால் நீங்கள் ரிஸ்க் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி நிலையத்தை பராமரிக்காமல் நிறுத்திவிட்டால் 500 டன் எடையுள்ள விண்வெளி நிலையம் இந்தியா உள்பட எந்த நாட்டின் மீது வேண்டுமானாலும் விழலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version