இந்தியா

இன்று விண்ணில் ஏவப்படும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

Published

on

இன்று காலை 11.30 மணியளவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

உலக நாடுகளுடன் விண்வெளி துறையில் போட்டிப்போட, தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை ஊக்குவிக்க 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இன்ஸ்ரோ உருவாக்கியது.

இந்த அமைப்பு மூலமாக ராக்கெட் தயாரித்தல், செயற்கைக்கோள் தயாரித்தல் போன்றவற்றுக்குத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் வெள்ளிக்கிழமை செலுத்த உள்ளனர்.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டின் பெயர் என்ன?

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டிற்கு விக்ரம்-எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 480 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும். மேலும் இதில் 3 விண்வெளி ஆய்வு சாதனங்களும் அனுப்ப உள்ளனர்.

முன்னதாக விக்ரம் – எஸ் ராக்கெட் நவம்பர் 15-ம் தேதி விண்ணில் செலுத்த இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

தனியார் ராக்கெட் ஏவுதளம்

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து தனியார் ராக்கெட் அதிகளவில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version