இந்தியா

சென்னையில் இந்தியாவின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.. தமிழக அரசின் அதிரடி திட்டம்!

Published

on

தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த உள்ளனர்.

தமிழ்நாட்டில் அமைய உள்ள இந்த முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் என்னவெல்லாம் இருக்கும்?

1) தடகள போட்டிக்கான உள் விளையாட்டு மைதானம்.
2) சிந்தட்டிக் தரையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்
3) உட்புற மற்றும் வெளிப்புற ஸ்கேட்டிங் விளையாட்டு வளையம்
4) கூடைப்பந்து, பாக்சிங் போன்ற விளையாட்டுகளுக்கு அரங்கங்கள்.
5) 10 டேனிஸ் மைதானங்கள்
6) நீச்சல் விளையாட்டு அரங்கங்கள்
7) உட்புற மற்றும் வெளிப்புற சைக்கிள் போட்டி வளையங்கள்
8) சாகச விளையாட்டு கூடங்கள்
9) மாடர்ன் உடற்பயிற்சி கூடம் மற்றும் தங்கும் விடுதிகள்.

இதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் பயனடைவார்கள். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் பங்கு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version