வணிகம்

இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவை தொடக்கம்..!

Published

on

பெங்களூரு: இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவையை யூனோகாயின் நிறுவனம் பெங்களூருவில் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது.

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு இது வரை தடை விதிக்கவில்லை. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ஸி நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் பணப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

இப்படிப் பட்ட சூழலில் இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி சேவையினை யூனோகாயின் தொடங்க இருப்பது என்ன மாதிரியா வரவேற்பினை பெறும் என்று தெரியவில்லை.

கிரிப்டோகரன்ஸி ஏடிஎம்

யூனோகாயினின் இந்தக் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் மூலம் பிட்காயின்,எத்திரியம் போன்றவற்றில் குறைந்தது 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும், மற்றும் தேவைப்படும் போது பணத்தினைத் திரும்பப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.

எங்கு உள்ளது இந்தக் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம்?

யூனோகாயின் நிறுவனம் இந்தக் கிரிப்டோகரன்ஸ்சி ஏடிஎம் மையத்தினைப் பெங்களூருவில் உள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் திறந்துள்ளது.

சோதனை முயற்சி

கிரிப்டோகரன்ஸி சோதனையினை வியாழக்கிழமை சோதனை செய்து பார்த்த யூனோகாயின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாத்வி விஸ்வனாத் வணிக ரீதியான சேவை திங்கட்கிழமை முதல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பரிவர்த்தனை

இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் குறைந்தது 50 பரிவர்த்தனைகளாவது நடைபெறும் என்று யூனோகாயின் எதிர்பார்க்கிறது.

ஏடிஎம் இயந்திரம்

இந்திய வங்கிகள் பயன்படுத்தும் அதேபொன்ற ஏடிஎம் இயந்திரத்தினை வாங்கிக் கிரிப்டோகரண்ஸிக்கு ஏற்றவாறும் மாற்றம் செய்துள்ளனர். இந்த ஒயந்திரத்தில் ஏடிஎம் கார்டுகளுக்குப் பதிலாகப் பயனர் ஐடி, மொபைல் எண் பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்யலாம் என்றும், ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிரிப்டோகரன்ஸிகள்

யூனோகாயின் நிறுவனம் பிட்காயின், எத்திரியம், யூனோடாக்ஸ் என 30 வகையான கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடுகளைச் செய்யும் சேவையினைத் தற்போது வழங்க உள்ளது.

ஜெப்பே

இந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோகரன்ஸி நிறுவனமான ஜெபே ஆர்பிஐ-ன் கடினமான விதிகளால் இந்தியாவில் இருந்து வெளியேறி மால்டாவில் அலுவலகத்தினைத் திறக்க உள்ள நிலையில் யூனோகாயினின் இந்த அறிவிப்பு கிரிப்டோகரன்ஸி முதலீட்டாளர்கள் இடையில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஏடிஎம் மையங்கள்

ஆர்பிஐ படி கிரிப்டோகரன்ஸி வங்கி பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்வது குற்றம் அல்ல. ஆனால் சட்டத்திற்கு உட்பட்டதும் அல்ல.

seithichurul

Trending

Exit mobile version