இந்தியா

நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி.. தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது!

Published

on

நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.  கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். முதல் நபராக தூய்மை பணியாளருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, கெளரவிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு மாநிலங்கள் வாரியாக தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கின.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தேசத்தை சுகாதாரமாக மாற்ற மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் தானும் போட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

Trending

Exit mobile version