சினிமா செய்திகள்

இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் – பக்ரீத் டீஸர் ரிலீஸ்!

Published

on

விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் பக்ரீத் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் என்ற அறிமுக கார்டுடன் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் பக்ரீத் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியிடப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி, ஏ.ஆர். முருகதாஸ், அட்லி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த டீஸரை இன்று மாலை சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்தனர்.

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா இந்த படத்தில் நடித்துள்ளனர். புது முயற்சியுடன் உருவாகியுள்ள படத்தின் டீஸர் பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

எம். எஸ். முருகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக வலம் வந்த ஜெகதீசன் சுப்பு, இந்த படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version