இந்தியா

இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையம்: எந்த நகரில் தெரியுமா?

Published

on

இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் நிலையம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் முதல் ரயில் முதல் ஏசி ரயில் நிலையம் 314 கோடி ரூபாய் செலவில் பெங்களூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

பாரதரத்னா விஸ்வேஸ்வரய்யா என்பவர் பெயரில் தொடங்கப்பட உள்ள இந்த ரயில் நிலையம் முழுக்க முழுக்க ஏசியால் குளிரூட்டப்பட்ட து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 ரயில்கள் நிற்கும் வசதி உள்ளது என்பதும் 4200 சதுர மீட்டரில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது என்பதும் தினமும் சுமார் 50 ஆயிரம் பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு பிளாட்பாரங்கள் வசதி கொண்ட இந்த ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பயணிகள் ஒவ்வொரு பிளாட்பாரம் செல்வதற்கும் தனியாக பாலங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகள் தங்குவதற்கான வெயிட்டிங் ஹால், உணவு சாப்பிடும் இடம் உள்ளிட்ட பல வசதிகள் இந்த ரயில் நிலையத்தில் உள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெங்களூரில் உள்ள விமான நிலையமும் ஏசி தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version