தமிழ்நாடு

சென்னையில் தயாரான இந்தியாவின் அதிவேக ரயில்.. சூப்பர் வசதிகள்!

Published

on

சென்னை: சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ”டிரைன் 18” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும் ரயில் உருவாக்கப்பட்டதே இல்லை.

இந்த ”டிரைன் 18”  முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்டது. அதேபோல் இதில் அனைத்து பெட்டிகளிலும் இலவச அதிவேக வைபை வசதி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷ்யம் என்னவென்றால் இதில் இன்ஜின் இல்லை என்பதுதான். மின்சார மூலம் இயங்கும் இது, மெட்ரோ போலவேதான் செயல்படும்.

இதில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளது. நடுவில் 2 பெட்டிகள் சிறப்பு இருக்கை உள்ள பெட்டிகள். இதில் இருக்கும் தனியங்கி கதவுகள் நாம் உள்ளே சென்றால்தான் மூடும்.

இதை உருவாக்க 100 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. இது பிரான்ஸ் மற்றும் சீனா, மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பம் கலந்து உருவாக்கப்பட்டது ஆகும்.

 

seithichurul

Trending

Exit mobile version