இந்தியா

அம்மாடியோவ்.. இந்தியாவின் கடன் ரூ.107.04 லட்சம் கோடியா?

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய அரசின் கடன் 101.3 லட்சம் கோடியாக இருந்தது.

Published

on

மத்திய அரசின் கடன் அளவு 2020 செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கின் படி, 107.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பொது கடன் குறித்த அறிக்கையில், 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய அரசின் கடன் 101.3 லட்சம் கோடியாக இருந்தது.

இதுவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டின் இறுதியில் 107.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக அதிகரித்த செலவினங்கள், வருவாய் சரிவு போன்றவற்றின் எதிரொலியால் கடன் தொகை ஒரே காலாண்டில் 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் இறுதி நிலவரத்தின் படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கடன் பொறுப்புகளில் பொதுக்கடன் பங்களிப்பு மட்டும் 91.1 சதவீதமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version