இந்தியா

கொரோனா 2ம் அலை எப்போது உச்சத்தைத் தொடும்: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published

on

இந்தியாவில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் இந்த இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல் செய்யப்படும் என்று சொல்லப்படுகின்றன. இந்நிலையில் இந்த 2 ஆம் அலை கொரோனா தொற்று எப்போது உச்சம் பெரும் என்பது குறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

‘தற்போது நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கூடி வருவதால், 2ம் அலை வந்துவிட்டதை உணர முடிகிறது. இது சுமார் 100 நாட்கள் வரை நீடிக்கலாம். பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இந்த கொரோனா அலை ஆரம்பித்ததாக எண்ணலாம்.

தற்போது பரவும் கொரோனா தொற்றைக் கட்டப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே தீர்வாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த இரண்டாம் அலை உச்சம் தொடும் என கணிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது எஸ்.பி.ஐ தரப்பு.

 

Trending

Exit mobile version