வணிகம்

ஓசூரில் ஐபோன் தொழிற்சாலை.. 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக ஒரு ஐபோன் தொழிற்சாலை ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ்கான் சென்னை

சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் தொழிற்சாலைகளில் ஐபோன் உற்பத்தி நடைபெற்றும் வரும் நிலையில், ஓசூரில் விரைவில் ஒரு ஐபோன் தொழிற்சாலை அமைய உள்ளது.

இந்த ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செய்ய உள்ளது.

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மிகப் பெரிய தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது.

இங்குதான் ஐபோன் உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்த ஒரு தொழிற்சாலை மூலமாக மட்டும் 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதற்கட்டமாக 60 ஆயிரம் ஊழியர்களில் 6 ஆயிரம் ஊழியர்களை ராஞ்சி, ஹசாரிபாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியினர் பெண்களை பணிக்கு எடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version