இந்தியா

இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம்.. தமிழகம்?

Published

on

இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும், ஆந்திரா பிரதேச மூன்றாவது இடத்தையும், ஆந்திர பிரதேசம் 3 வது இடத்தையும், கர்நாடகா 4வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள் சமத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை பொருத்து எடுக்கப்பட்டுள்ளது என்று, அந்த அமைப்பின் தலைவரான, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

தென் இந்திய மாநிலங்கள் முன்னிலையில் உள்ள இந்த பட்டியலில், உத்திர பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்கள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா, இமாச்சல் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன,

சிறந்த நிர்வாகம் கொண்ட யூனியன் பிரதேசம் பட்டியலில் சண்டிகர் முதலிடத்திலும், புதுச்சேரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

Trending

Exit mobile version