வணிகம்

இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினரான தயாநிதி மாறன், விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் கட்டுமான திட்டங்களும் சரிவர இல்லை. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான முனையம் எப்போது திறக்கப்படும் எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த மான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தினசரி விமான பயணிகளின் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்தது. அதுவே இப்போது புதிய உட்சமாக 4.17 லட்சமாக அதிகரித்துள்ளது

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் விமானப் பயணம் தொடங்கிய போது, அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய விமான போக்குவரத்துத் துறை அதனைத் திறம்படச் சமாளித்து உள்ளது.

இந்தியாவில் விமான பயணத்தை மேலும் சீராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் விமான டிராஃபிக்கை சரி செய்ய விமான நிலைய ஆப்ரேட்டர்கள், குடியேற்றம், சிஎஸ்ஐஎஃப் அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்போது உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும்.

சென்னை, கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், ராஜ்கோட், விஜயவாடா, ராய்பூர் மற்றும் அம்ரிஸ்டர் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்கு விரைவில் விடப்பட உள்ளது. அதன் மூலமாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும்” எனவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11-ம் தேதி கோவா மாநிலத்தின் 2வது சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுவரையில் கோவா செல்லும் விமானங்கள் அங்குள்ள ராணுவ விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version