இந்தியா

2050-ம் ஆண்டு இந்தியாவின் இந்த 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் ஏற்படும்.. அதிர்ச்சி தகவல்!

Published

on

2050-ம் ஆண்டு இந்தியாவில் 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வனவிலங்கு நிதி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நகரங்கள் பட்டியலில் சீனாவிலிருந்து 50 நகரங்களும், இந்தியாவிலிருந்து 30 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், வரும் ஆண்டுகளில் டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நகரங்களில் 30.50 கோடி நபர்களிடம் இந்த ஆய்வுக்கான தரவுகள் பெறப்பட்டு, முடிவுகள் வகுக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் இதில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால், கடுமையான பிரச்சனையில் மக்கள் அவதிப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை நாம் பார்த்து வரும் நிலையில், 8 சதவீத மழை நீர் மட்டுமே சேமிக்கப்படுகிறதாம்.

இதில் எல்லாம் மத்திய அரசும், மாநில அரசும் கவனம் செலுத்தினால் வரும் எதிர்காலத்தைத் தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்றலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version