பர்சனல் ஃபினான்ஸ்

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

Published

on

என்பிஎஸ் என பலராலும் அழைக்கப்பட்டு வரும் தேசிய பென்ஷன் திட்டத்தில் பொதுத் துறை, தனியார்த் துறைகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் முதலீடு செய்யலாம்.

தேசிய பென்ஷன் திட்டத்தில் குறைந்த ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த நிதி திட்டங்கள், பத்திரம் சார்ந்த நிதி திட்டங்கள் அல்லது அதிக லாபம் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

தற்போது, இந்தியாவில் 10 பென்ஷன் நிதி நிறுவனங்கள் உள்ளன. அதில், தேசிய பென்ஷன் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, 2023, டிசம்பர் 15-ம் தேதி வரையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 திட்டங்கள் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

எஸ்பிஐ பென்ஷன் ஃபண்ட்

தேசிய பென்ஷன் திட்டத்தில் அதிக லாபம் வழங்குவதில் முதலிடத்தில், எஸ்பிஐ பென்ஷன் நிதி திட்டம் உள்ளது. இந்த திட்டம் கடந்த 10 ஆண்டில் 9.92 சதவிகிதம் லாபம் வழங்கியுள்ளது.

யூடிஐ ரிடைர்மெண்ட் சொல்யூஷன்ஸ்

இந்த தேசிய பென்ஷன் திட்டம் சென்ற 10 ஆண்டுகளில் சராசரியாக 9.84 சதவிகித லாபத்தை வழங்கியுள்ளது.

எல்ஐசி பென்ஷன் ஃபண்ட்

எல்ஐசி பென்ஷன் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 9.85% வரை லாபம் வழங்கியுள்ளது.

பொறுப்பு துறப்பு (Disclaimer)

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிதி திட்டங்களில் முதலீடு செய்து ஏற்படும் இழப்புகளுக்கு www.bhoomitoday.com பொறுப்பாகாது. முதலீடு செய்யும் முன் சம்மந்தப்பட்ட முதலீட்டு ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கவும்.
Tamilarasu

Trending

Exit mobile version