வணிகம்

கவனத்திற்கு… 70 கிலோ எடைக்கு 1,500 கிலோ எடையுள்ள காரை பயன்படுத்தும் இந்தியர்கள்!

Published

on

உலகின் பெரும் வாரியன மக்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். இப்படி கனவில் உள்ளவர்கள் முதலில் இந்த செய்தியைப் படியுங்கள்.

இந்தியாவில் கார் வைத்துள்ளவர்களில் பெரும் பகுதியானவர்கள் சராசரியாக 65 முதல் 70 கிலோ எடை உடைய தங்களை தனியாக ஒரு இடத்திற்குச் செல்ல 1500 கிலோ எடை உள்ள காரை பயன்படுத்துகிறார்கள்.

இப்படி தனி ஒருவரின் பயணத்திற்காக மிகப் பெரிய எடை உள்ள கார்களை பயன்படுத்துவதால் அதிகளவில் வளங்கள் வீணாகின்றன. இப்படி வளங்கள் வீணாகக் கூடாது என்பதற்கான தான் நோனோ காரை அறிமுகம் செய்தது. ஆனால் அது தோல்வியைத் தான் தழுவியது.

அதற்குத் தீர்வு காணும் வகையில் மஹிந்தரா விரைவில் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் வாகனங்களால் 7 சதவீத கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது. அதை குறைக்கவே எலக்ட்ரிக் வாகனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இது வளர்ச்சி பெற மிகப் பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

சீனாவுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதில் இந்தியா 5 வருடங்கள் பின்தங்கியுள்ளது. ஆனால் இந்தியா எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் உலகின் முன்னோடியாக வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

2019-ம் ஆண்டு வெறும் 1400 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது மிகக் குறைவு. ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குகளை வகித்து வருகிறது என்று மஹிந்தரா & மஹிந்தரா நிர்வாக இயக்குநர் பவன் கொயங்கா தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version