பிற விளையாட்டுகள்

அரையிறுதியில் மகளிர் அணி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கமா?

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், பிவி சிந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்து உள்ள நிலையில் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணி சற்று முன் நடந்த காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் மோதியது. இருநாட்டு வீராங்கனைகளும் மிகவும் ஆவேசமாக விளையாடியபோது இந்திய ஆக்கி அணி முதல் பாகத்திலேயே ஒரு கோல் போட்டு –1-0 என்று முன்னணியில் இருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது பாதியில் இரு அணிகளில் உள்ள வீராங்கனைகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. இதனை அடுத்து அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 36 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது இந்திய ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version