இந்தியா

இந்தியாவின் தடுப்பூசியை அங்கீகரித்த 96 நாடுகள்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் மூன்று வகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன என்பது இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு செலுத்தி வருவதாகவும் இதுவரை 109 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை பெற்று வருகிறார்கள் என்றும் இந்தியா வழங்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ் சர்வதேச அளவில் 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து இதனால் தப்பிக்க முடியும் என்றும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் தடுப்பூசி செலுத்தி கொண்டு அதன் சான்றிதழை இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொண்டு செல்லலாம் என்றும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் இதில் அடக்கம் என்றும் அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version