தமிழ்நாடு

முஸ்லீம் லீக் கேட்கும் தொகுதிகள் எவை எவை? திமுகவுடன் ஆலோசனை!

Published

on

திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்து அந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இன்றைய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஆம்பூர் அல்லது வாணியம்பாடி தொகுதி, சிதம்பரம் அல்லது பாபநாசம் ஆகிய தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கேட்பதாகவும் இது குறித்து தொடர்ந்து திமுகவிடம் அக்கட்சி ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இதில் எந்த தொகுதி கிடைத்தாலும் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் தங்களது நிலைமையை எடுத்துக் கூறி வருகின்றனர், அதேபோல் சிதம்பரம் அல்லது பாபநாசம் தொகுதிகளிலும் தங்களுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர். திமுக விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

Trending

Exit mobile version