உலகம்

பணயக்கைதிகளாக இந்திய மாணவர்கள்: ரஷ்ய அதிபரின் பகீர் குற்றச்சாட்டு!

Published

on

உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை அடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க ரஷ்ய அதிபர் புதின் இடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்புவதில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்த ஒரு கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் படி உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இருப்பினும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்தியா அதில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததால் உக்ரைனுக்கு இந்தியா மீது கோபம் என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version