கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணித் தேர்வு; யார் இன் – யார் அவுட்?

Published

on

வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.

மேலும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த கிரிக்கெட் தொடருக்கும் அணித் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக சொந்த மண்ணியில் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் தற்போது அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அனுமா விகாரி மீண்டும் அணிக்கு கம் பேக் கொடுத்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:

விராட் கோலி, அஜிங்கியே ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், மயான்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, அனுமா விகாரி, ரிஷப் பன்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ராதுல் தாக்கூர், உமேஷ் யாதவ்.

கே.எல்.ராகுல் மற்றும் ரிதிமன் சகா ஆகியோர் உடல்நலத்தைப் பொறுத்து அணியில் இடம் பெறுவார்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version