வணிகம்

2022-ம் ஆண்டு மிக மோசமான சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்!

Published

on

2022-ம் ஆண்டு மிகவும் மோசமாகச் செயல்பட்ட ஆசிய கரன்சிகள் பட்டியலில் இந்திய ரூபாய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.33 ரூபாயாக இருந்து.

ஒரே ஆண்டில் அது 11.3 சதவிகிதம் சரிந்து 82 ரூபாய் 72 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஜப்பான் யென் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ரூபாய் சந்தித்த மிகப் பெரிய மதிப்பு இழப்பு இது எனத் தரவுகள் கூறுகின்றன.

அதே நேரம் 2015-ம் ஆண்டுக்கு மிகப் பெரிய எற்றத்தை அமெரிக்க டாலர் மதிப்புப் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பைத் தொடர்ந்து சீனாவின் யுவான், இந்தோனேஷிஹ்யா ரூபாய், பிலிப்பைன்ஸ் பேசோ, தென் கொரியாவின் வான், மலேஷியாவின் ரிக்கெட், தாய் பாத் உள்ளிட்ட நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு நிகரான சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலர் மதிப்பு மட்டும் சற்று அதிகரித்து வர்த்தகமாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version