இந்தியா

இந்த நேரத்தில் தான் விபத்துக்கள் அதிகம்.. இந்திய சாலை விபத்துக்கள் குறித்த தகவல்கள்!

Published

on

இந்தியாவில் மிக அதிகமாக சாலை விபத்து நிகழும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எந்தெந்த நேரங்களில் இந்திய சாலைகளில் அதிக விபத்து ஏற்படுகிறது என்ற தகவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் இந்த நேரத்தில் தான் அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 40% இந்த நேரத்தில் தான் நடந்துள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சாலை பயணம் பாதுகாப்பானது என்றும் இந்த நேரத்தில் வெறும் 10 சதவீத விபத்துகள் நடந்து இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டை பொறுத்தவரை மொத்தம் 4.12 லட்சம் விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 1.58 லட்சம் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளது என்றும் இந்த நேரத்தில் மொத்த விபத்துகளில் 21 சதவீத விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ள டேட்டாக்கள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் எனவே பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இயக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை அதிக விபத்துகள் தமிழகத்த்ல் தான் தான் நடந்து உள்ளது என்றும் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவில் அதிக விபத்துகள் நடந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்று உள்ளது இந்த மாநிலங்களில் 6 மணி முதல் 3 மணி முதல் 9 வரை மட்டுமே அதிக விபத்துகள் நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version