இந்தியா

அதிர்ச்சி.. கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு இத்தனை கோடி நட்டமா?

Published

on

கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்கள் விநியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் சேவை எப்போதும் நட்டத்தில் தான் உள்ளது. பயணிகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினாலும் அதேதான் நிலை.

அதேநேரம் சரக்கு போக்குவரத்து சேவை தான் வருவாய் ஈட்டும் பிரிவாக இந்தியன் ரயில்வேக்கு உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சரக்கு போக்குவரத்து, ஆக்ஸிஜன் பற்றக்குறை என பல்வேறு சிக்கலை இந்தியன் ரயில்வே பெரும் அளவில் உதவியது.

பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை நட்டம் அடைந்தாலும் மும்பை – நாக்பூர் எக்ஸ்பிரஸ் வே, மும்பை – அகமதாபாத் புல்லெட் ரயில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே கூறியுள்ளார்.

மறுபக்கம் நாடு முழுவதும் தனியார் ரயில் சேவைகளுக்கு இந்தியன் ரயில்வே அனுமதி அளித்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version