வணிகம்

தென்னிந்தியாவில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. சென்னைக்கு உண்டா?

Published

on

இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் மேலும் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் செகந்திராபாத்தில் இருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு காரணமாக மேலும் 3 வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு ரயில்வே அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில் ’தென்னிந்தியாவில் மேலும் மூன்று வந்தே வாரத்தில் ரயில்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

#image_title

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சேகுடாவில் இருந்து கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து ஆந்திராவின் திருப்பதி வரை ஒரு ரயிலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவில் புனே வரையிலும் என 3 வந்தே பாரத் சேவைகளுக்கான வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே வட இந்தியாவின் பல மாநிலங்களில் வந்தே பாரத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் அதிக வந்தே பாரத ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் சென்னையிலிருந்து ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே தற்போது இயங்கி வருவதால் மேலும் ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் கடைகோடி நகரமான கன்னியாகுமாரியில் இருந்தும் கோவையில் இருந்தும் வந்தே வாரத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்களையும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது டெல்லி, நாக்பூர், மும்பை, சென்னை, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில் அதிக வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version