இந்தியா

ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலை குறைக்க ‘குளோன் ரயில் திட்டம்’.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி!

Published

on

ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் குளோன் ரயில் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

குளோன் ரயில்

குளோன் ரயில் சேவையின் கீழ், பயணிகள் அளவுக்கு அதிகமாக ஒரு ரயிலின் டிக்கெட்டை புக் செய்யும் போது குளோன் ரயில் சேவை தொடங்கும். குளோன் ரயில் சேவை கீழ் புக் செய்யப்பட்ட டிக்கெட்கள் ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பான சார்ட் தயார் படுத்தப்படும் போது தான் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும். அதுவரை பயணியின் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் தான் இருக்கும்.

இந்த குளோன் ரயில் பெட்டிகளில் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களின் விவரம், ரைல் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பு தான் பயணிகளுக்கு அறிவிக்கப்படும். இந்த குளோன் சேவைக்கு கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை. எனவே கூடுதல் ரயில் பெட்டிகள் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து மட்டுமே இந்த சேவையை தொடங்க உள்ளனர்.

விகல்ப் திட்டம்

ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலைக் குறைக்க ஏற்கனவே விகல்ப் ரயில் சேவையை இந்தியன் ரயில்வேஸ் செயல்படுத்தி வருகிறது. விகல்ப் திட்டத்தில் ஒரு வழித்தடத்தில் செல்லும் குறிப்பிட்ட ரயிலில் ட்க்கெட் புக் செய்து காத்திருப்பு பட்டியலிலிருந்தால், அடுத்த 2 நாட்களுக்குள் டிக்கெட் கிடைத்தால் போதும் என்று பயணி நினைத்தால் விகல்ப் சேவையை தேர்வு செய்யலாம். விகல்ப் தேர்வு செய்த ரயில் பயணிகளுக்கு அடுத்தடுத்து அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் டிக்கெட் ஏற்பாடு செய்து தரப்படும்.

மத்திய அரசு வரும் காலத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்கில் காத்திருப்பு பட்டியல் என்ற ஒன்று இல்லாமல், கடைசி நிமிடம் வரை டிக்கெட் புக் செய்தாலும் சீட் கிடைப்பது போன்ற திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version