வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் ‘ரயில் வீல் பேக்டரி’ நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ரயில் வீல் பேக்டரி’ நிறுவனத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 192 ‘தொழில்பழகுநர் பயிற்சி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Apprentices

மொத்த காலியிடங்கள்: 192

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter – 85
2. Mechinist – 31
3. Mechanic (Motor Vehicle) – 08
4. Turner – 05
5. CNC Programming Cum Operator (COE Group) – 23
6. Electrician – 18
7. Electronic Mechanic – 22

வயது: 15.11.2019 தேதியின்படி 15 வயது பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் சம்மந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: சி.என்.சி., புரோகிராமிங் ஆப்ரேட்டர் பயிற்சிக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.12,261 வழங்கப்படும். மற்ற பயிற்சிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.10,899 வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை Principal Financial Adviser, Rail Wheel Factory என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி வரவோலையாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The senior Personnel officer,
Personnel Department,
Rail Wheel Factory,
Yelahanka, Bangalore – 560 064

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version