பர்சனல் ஃபினான்ஸ்

பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!

Published

on

ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை வெளியிடுகிறது. எனவே இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ வெளியீட்டுத் தேதி

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகள் ஐபிஓ மூலம் ஜனவரி 18-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகளை பொது வெளியீட்டுக்கு முன்பு வாங்கலாம்.

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை எவ்வளவு?

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை 25 முதல் 26 ரூபாய் வரையில் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் எவ்வளவு பங்குகளை வாங்க வேண்டும்?

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் குறைந்தது 575 பங்குகள் ஒரு லாட் என மட்டுமே வாங்க முடியும். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலுமே பங்குகள் பட்டியலிடப்படும். அதிகபட்சம் 13 லாட் வரை வாங்க முடியும்.

இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ – பலங்கள்

1) இந்திய ரயில்வே வளர்ச்சி திட்டமிடலில் முக்கிய பங்கு
2) சிறந்த கடன் மதிப்பீடு(AAA)
3) கடன் செலவு
4) வலுவான நிதி செயல்திறன்
5) சிறந்த சொத்து-பொறுப்பு மேலாண்மை
6) அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு

எவ்வளவு நிதி

ஐபிஓ மூலம் 4600 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் திரட்ட உள்ளது.

Trending

Exit mobile version