விளையாட்டு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீரர்!
26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை படைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 15- 21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது/ உலக பேட்மிண்டன் தொடரில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை ஸ்ரீகாந்துக்கு கிடைத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.