பிற விளையாட்டுகள்

உலக கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை!

Published

on

அஜர்பைஜான் நாட்டில் உள்ள பகு நகரில், சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. ரைபிள் மற்றும் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகளில் வீரர்,ன மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

இந்திய வீராங்கனை சாதனை

நேற்று நடைபெற்ற இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கானப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் (19 வயது) கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில், இவர் தகுதிச் சுற்றில் 595 புள்ளிகளைச் சேர்த்து உள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு பல்கேரிய வீராங்கனையான டயானா லார்கோவா, 594 புள்ளிகளைச் சேர்த்து இருந்ததே இதுவரையில் உலக சாதனையாக இருந்து வந்தது. இதனை சங்வான் நேற்று முறியடித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக 1989 ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் 593 புள்ளிகள் சாதனையையும் கூட தற்போது சங்வான் முறியடித்து இருக்கிறார்.

இருப்பினும், தகுதிச் சுற்றில் முதல் இடம் வகித்த சங்வான், 8 பேர் கலந்து கொண்ட இறுதிச் சுற்றில் கடைசி இடமத்தை மட்டுமே பிடித்து, இந்தியாவுக்காக பதக்கம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version