வேலைவாய்ப்பு

இந்திய துணை ராணுவப்படையில் வேலை!

Published

on

துணை ராணுவப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 121. காவலர்கள் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: Indo Tibetan Border Police

மொத்த காலியிடங்கள்: 121

வேலை: Constable (GD)

மாத சம்பளம்: ரூ.21,700

வயது: 21.06.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்றுப் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவப் பரிசோதனையில் முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/4/26/ITBP-Recruitment-2019-121-Constable-GD-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21,06.2019

seithichurul

Trending

Exit mobile version