உலகம்

ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..யார் இந்த அரோரா அகன்ஷா?

Published

on

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநா ஊழியராக பணியாற்றி வரும் அரோரா அகன்ஷா கூறியிருக்கிறார். தற்போதைய தலைவரான அன்டோனியோ குடரெஸ்க்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ள முதல் வேட்பாளரும் இவர் தான்.

ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச்செயலாளராக இருப்பவர் போர்ச்சுகீஸ் நாட்டை சேர்ந்த அன்டோனியோ குடரெஸ். இவர் ஐநாவின் 9வது பொதுச்செயலாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றார். இவருடைய பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் 71 வயதாகும் அன்டோனியோ குடரெஸ் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிக்க தாம் கேட்கபோவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் இம்முறை அவரை எதிர்த்து போட்டியிட போவதாக இந்திய வம்சாவளி பெண்ணான அரோரா அகன்ஷா அறிவித்துள்ளார். 34 வயதாகும் அரோரா ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (யுஎன்டிபி) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அரோரா அகன்ஷா டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை நிர்வாக ஆய்வுகள் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரோரா அகன்ஷா

இவர் ஐநாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறி ஒரு பிரச்சார வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். உலகின் மிக வலிமையான அமைப்பான ஐநாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரு பெண் பொதுச்செயலாளர் கூட இருந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் குறிப்பிட்டே மாற்றங்களை நிகழ்த்த அழைப்பு விடுத்துள்ளார் அரோரா அகன்ஷா.

அந்த பிரச்சார வீடியோவில், பொதுவாக என்னுடைய பதவியில் இருப்பவர்கள் அதிகார பொறுப்பிற்கு வர முயல்வது இல்லை. நாங்கள் எங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டும். தலையை தொங்கவிட்டுக்கொண்டு உலகம் இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக, ஐ.நா உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவிகளும் மிக குறைவு, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரு ஐநாவுக்கு நாம் தகுதியானவர்கள் என்றும் அதில் கூறியுள்ளார்.

இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஐநாவின் தலைமையகத்திற்குள் நடந்து செல்கிறார். மேலும் ஐநாவில் தன்னுடைய ஊழியர் எண்ணையும் குறிப்பிட்டு உரையாற்ற தொடங்குகிறார்.

Also Read: இந்தியர்களின் எதிர்காலம் அமெரிக்காவில் எப்படி இருக்க போகிறது? பைடன் என்ன செய்ய போகிறார்?

அவருக்கு முன் வந்தவர்கள் “ஐ.நா.வை பொறுப்பேற்கத் தவறிவிட்டனர் என குற்றசாட்டியுள்ள அரோரா அகன்ஷா, அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். இதுதான் ஐநாவால் செய்ய முடிந்த சிறந்தவை என்பதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறுவதாக அந்த வீடியோ மேலும் நீள்கிறது.

Indian origin Arora Akanksha announced to her candidacy to be its next UN Secretary-General

ஐநா பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச்செயலால் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுகிறார், பொதுச்செயலாளரின் தேர்வை சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் வீட்டோ அதிகாரத்துக்கும் உட்படுத்தும்.

இதற்கிடையே ஐநா பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செயல்முறைக்கான வேட்பாளர். அவர் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

“இது உறுப்பு நாடுகளால் நடத்தப்படும் ஒரு செயல்முறையாகும். எனவே, அதில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகள் பற்றி எனக்குத் தெரியாது. நான் தற்போதைய வேட்பாளருக்காக பேசுகிறேன், “இது உறுப்பு நாடுகளால் நடத்தப்படும் ஒரு செயல்முறையாகும். எனவே, அதில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகள் பற்றி எனக்குத் தெரியாது. நான் தற்போதைய வேட்பாளருக்காக பேசுகிறேன் என்றார்.

ஐ.நா பொதுச் சபைத் தலைவர் வோல்கன் போஸ்கிரின் செய்தித் தொடர்பாளர் பிரெண்டன் வர்மா கூறும்பொழுது, இந்த விஷயத்தில் தலைவர் அலுவலகத்திற்கு முறையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. உறுப்பு நாடுகளில் இருந்து பொதுச்செயலாளர் பதவிக்கு முறையான வேட்புமனுக்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் பொதுச் சபைத் தலைவருக்கு கிடைக்கவில்லை என்றும் வர்மா கூறினார்.

ஐ.நா. அரசியல்வாதிகளுக்கு சேவை செய்வதை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மாற்றத்தை கொண்டுவரும் தலைமுறை நம்முடையது, நாங்கள் கொண்டு வருவோம் என நம்பிக்கையோடு பேசியிருக்கும் அரோரா அகன்ஷா ஐநாவின் முதல் பெண் பொதுச்செயலாளராக வருவாரா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version