வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தி துறையின் வேலை!

Published

on

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை: Trade Apprenticeship

காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 10
2. Welder (Guess & Electric) – 02
3. Turner – 02
4. Computer Network Technician – 02
5. Computer Operator & Programming Assistant – 02
6. Draftsmen (Machenic)- 02
7. Electronic Machenic – 10
8. Electrician – 04
9. Electroplater – 02
10. Machinic Motor Vehicle – 06
11. Machinist – 02

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 2017க்கு பின்னர் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

உதவித்தொகை: மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் www.rrcat.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியக்கொள்ள www.rrcat.gov.in என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2019

seithichurul

Trending

Exit mobile version