இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!

Published

on

இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு செலுத்துவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீரும் நிலையில் உள்ளதால் மத்திய அரசு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து இந்திய நெட்டிசன்கள் பலர் கூகுளில் ஆக்சிஜன் குறித்து தேட ஆரம்பித்துள்ளனர்.

கூகுள் தேடுபொறியில் ஆக்சிஜன் தொடர்பான தகவல்களை இந்தியர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் ஹிஸ்டரி தெரிகிறது. வரலாறு காணாத ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version