இந்தியா

பல உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புப் படை: துருக்கி மக்கள் நன்றி..!

Published

on

சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும் மருந்து பொருட்களை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவலின்படி இடிப்பாடுகளுக்கு இடையே இருக்கும் பொது மக்களை இந்திய தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்பு பனியில் ஈடுபட்டு வருவதாகவும் ஏராளமான உயிர்களை இந்திய தேசிய படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்ன துருக்கி சென்ற நிலையில் அங்கு கட்டிடத்தின் இடுப்பாடுகளிலிருந்து சிக்கிய பலரை உயிருடன் மீட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக துருக்கியில் விழுந்த கட்டிடத்தின் இடுப்பாடுகளிலிருந்து ஆறு வயது சிறுவனை தேசிய மீட்பு படை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டனர் என்றும் அந்த சிறுவனின் உடல்நிலை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்திய தேசிய மீட்புப்படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பூகம்பம் நடந்த 72 மணி நேரத்திற்குள் மீட்பு படையின் பணி மிகவும் முக்கியம் என்பதை அறிந்த இந்தியா உடனடியாக தேசிய பேரிடர் படையை அனுப்பியது என்பதும் மீட்பு படையினரும் எந்தவித தாமதமும் இன்றி மீட்பு பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஏராளமான மக்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றி உள்ளதாகவும், இன்னும் மீட்புப்பணீகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

துருக்கியில் மிக அதிகமான குளிர் தற்போது காணப்படும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அதற்கு ஆயத்தமாக சென்றுள்ளனர் என்பதும் குளிர்கால ஆடைகள் உள்பட அனைத்தையும் இங்கிருந்தே அவர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை மற்றும் சில அமைப்புகள் குளிர்கால ஆடையை எங்களுக்கு கொடுத்தனர் என தேசிய மீட்புடை தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தேசிய மீட்புப்படையினர் தங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதும் நான்கு நாட்களில் ஆயிரக்கணக்கான தரைமட்டமான கட்டிடங்களில் உள்ளவர்களை தேடுவது மிகவும் சவாலாக இருக்கிறது என்றும் தேசிய மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல நாடுகள் துருக்கி நாட்டிற்கு உதவி செய்த போதிலும் இந்திய மீட்பு படையினர் சுறுசுறுப்பாக உயிருக்கு போராடி வரும் மக்களை மீட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் துருக்கி அரசு மற்றும் துருக்கி மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version