சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருதினை மிஸ் செய்த இந்திய திரைப்படம்!

Published

on

திரை உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவிலிருந்து ’ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் சென்ற நிலையில் அந்த திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருதை மிஸ் செய்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான 93 வது ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவிலிருந்து பல திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு, சகுந்தலாதேவி உள்பட பல திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு ’ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை நடுவர்கள் தேர்வு செய்தனர்.

இதனையடுத்து இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதினை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்காக மொத்தம் இந்தியா உள்பட 78 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பட்டியல் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் ’ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பட்டியலில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. எனவே ஆஸ்கார் விருதை ஜல்லிக்கட்டு திரைப்படம் மிஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் உருவாகிய ’ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்து இருந்தனர் என்பதும், இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 சர்வதேச திரைப்படங்களின் பட்டியல் இதோ:

author avatar
seithichurul

Trending

Exit mobile version