இந்தியா

இந்தியாவைவிட்டு அதிகளவில் வெளியேறும் பணக்காரர்கள்: என்ன காரணம்?

Published

on

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவர் உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் துபாயில் குடியேறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் கரிபியன் நாடுகளில் ஒன்றில் குடியுரிமையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது.

இதேபோல் பல செல்வந்தார்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு வருமான வரி அதிகாரிகளின் கொடுமைகள் ஒரு காரணம் என்றும், இந்தியாவின் வலதுசாரி அரசியலும் மற்றுமொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்திய மில்லியனர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களில் ஒரு சில என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய செல்வந்தர்கள் பலர் மால்டா சைப்ரஸ் போன்ற பல நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் நாட்டில் குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பல மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version